Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே வீடியோ தான் மொத்த லைஃப்-ம் காலி...வெள்ளை சுறாவை வறுத்து தின்ற சீனப்பெண் - 10 ஆண்டுகள் சிறை?

madhankumar August 03, 2022 & 13:40 [IST]
ஒரே வீடியோ தான் மொத்த லைஃப்-ம் காலி...வெள்ளை சுறாவை வறுத்து தின்ற சீனப்பெண் - 10 ஆண்டுகள் சிறை?Representative Image.

வெள்ளை சுறா ஒன்றை வறுத்து தின்று அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சீனாவை சேர்ந்த பெண் மீது அந்த நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த திசி என்ற இளம்பெண் வெள்ளை சுறா ஒன்றை வறுத்து சாப்பிடும் வீடியோ ஒன்றை 8 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் சட்ட விரோதமாக கருதப்படும் இந்த செயலுக்கு அந்த பெண் மீது சீன காவல் துறையினர் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சிலர் கூறும்போது அந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்படலாம் என கூறுகின்றனர். வேலியில் போகிற ஓணானை வேட்டியில் எடுத்து விட்டாற்போல் இந்த பெண்ணின் செயல் உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் "இது பார்க்க கொடூரமாக இருந்தாலும் இதன் சுவை அருமையாக உள்ளது" என பதிவிட்டுள்ளார். மேலும் தான் சாப்பிடும் அந்த சுறா தன்னை விட பெரியது என காட்டுவதற்காக அதன் அருகில் படுத்து காட்டியுள்ளார். இந்த சட்டவிரோத செயலை செய்வதை பார்க்க அங்கு கூடியிருந்த மக்களுக்கும் அவர் சமைத்த சுறா இறைச்சியை அந்த  பெண் வழங்கியுள்ளார். தற்போது அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பாதுகாக்கப்படும் உயிரினங்களில் வெள்ளை சுறாவும் இடம்பெற்றிருப்பதால், அவரின் இந்த சட்டவிரோத செயலுக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவரது சொத்துகள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்