Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெலோசி தைவான் விசிட் :- போர் பயிற்சியை தொடங்கிய சீனா..

Bala August 03, 2022 & 13:06 [IST]
பெலோசி தைவான் விசிட் :- போர் பயிற்சியை தொடங்கிய சீனா..Representative Image.

சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதை அடுத்து தைவானை சுற்றி வளைத்து சீனா ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது தென்சீனக்கடலில் பெரும் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு அடுத்த படியாக அதிக அதிகாரம் கொண்டுள்ள சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் போது தைவானுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு சீனா வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தைவான் விவகாரத்தில் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம் என வழக்கம் போல் எச்சரிக்கை விடுத்தது.

இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத நான்சி பெலோசி, திட்டமிட்டப்படு நேற்ரு இரவு தைவானில் இறங்கினார். அவர் இறங்குவதற்கு முன்னர் சீனா ராணுவ வாகனங்கள் தைவானை நோக்கி நகர்த்தப்பட்டன. மேலும் 21 சீன போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறு நுழைந்ததாக கூறப்பட்டது.

மேலும் நான்சி பெலோசி செல்லும் விமானத்திற்கு பாதுகாப்பாக ஜப்பானில் உள்ள அமெரிக்கா ராணுவ தளத்தில் இருந்து போர் விமானங்கள் தைவானை நோக்கி அனுப்பட்டன. அதற்கு முன்னதாக தைவானை ஒட்டிய பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் அமெரிக்கா போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன. அவை 30 நிமிடங்களில் தைவானை சென்றடையும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டன. சீனாவின் அதி நவீன ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளை தைவானை நோக்கி நிறுத்தியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நான்சி பெலோசி பத்திரமாக தைவானில் தரையிறங்கினார். இதனால் கடும் கோபமடைந்த சீனா தைவானில் இருந்து சில பழ வகைகள் மற்றும் மீன்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், தைவானைச் சுற்றி கடற்படை மற்றும் விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சிகளை தொடங்கியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்