Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலி உயிரிழப்பு

Baskaran Updated:
குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலி உயிரிழப்பு Representative Image.

போபால்: குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி பலியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகள்  பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த புலிகள் அடுத்தடுத்து இறந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி செளகான் கூறுகையில், சூரஜ் என்னும் ஆண் புலி தற்போது இறந்துள்ளது. இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும். இந்த இறப்புகள் இயற்கையாக நடந்தால் நாம் பயப்பட வேண்டாம். மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும், கொண்டு வரப்பட்டு. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் ஜுவாலா என்ற சிவிங்கிபுலி நான்கு குட்டிகளை ஈன்றது. இதில், மூன்று குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதேபோல் சாஷா எனும் பெண் சிவிங்கி புலி, சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதே மார்ச்சில் உயிரிழந்தது.

உதய் என்ற ஆண் சிவிங்கி புலி, ஏப்ரலில் இறந்தது.பின்னர் தக்ஷா என்ற பெண் சிவிங்கிபுலி, இனச்சேர்க்கையின் போது காயமடைந்து மே மாதம் இறந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தேஜாஸ் என்ற ஆண் சிவிங்கி புலி இறந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்