Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனை மேற்கொள்ள பெற்றோர் அனுமதி

Baskaran Updated:
வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனை மேற்கொள்ள பெற்றோர் அனுமதி  Representative Image.

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நான்கு சிறுவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அவர்களது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 119 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதனை படிப்படியாக செய்து வருகின்றனர். தொட்டியில் எடுக்கப்பட்ட மனித கழிவின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஏற்கனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இறையூரைச் சேர்ந்த மூவர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த ஒருவர் என நான்கு சிறுவர்களிடம் மரபணு பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக 4 சிறுவர்களின் பெற்றோர்கள் புதன்கிழமை நீதிமன்றத்திற்கு வர அழைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றுவிட்டதால் அழைத்து வர இயலவில்லை எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர். சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையில்லை என வேங்கைவயலைச்  சேர்ந்த சிறுவனின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மலர்மன்னன் தெரிவித்தார். சிறுவர்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகி கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சிறுவர்களின் பெற்றோர்கள் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்