Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடக்கம்..

Nandhinipriya Ganeshan September 08, 2022 & 12:00 [IST]
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடக்கம்..Representative Image.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியை கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ. 33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டம் சென்னை உட்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 37,740 மாணவ, மாணவிகள் பலன் பெறுவார்கள். மேலும், 1545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. 

என்னென்ன உணவுகள்? ரவா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா கிச்சடி, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண் பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள்ளன. 

வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். அந்தவகையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்