Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலவர் ஸ்டாலின் கடிதம்...!

madhankumar July 25, 2022 & 18:34 [IST]
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலவர் ஸ்டாலின் கடிதம்...!Representative Image.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரியும், மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி இராமநாதபுரதிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் அவர்களை உடனடியாக மீட்கவேண்டி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றில் சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும் எனத் தெரிவித்துள்ள முதலவர் தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அணைத்து மீனவர்களையும், மீன் பீடு படகுகளையும் விடுவிக்க இந்திய அரசன் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலில் இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்கவும், மீன்பிடி படகு உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்