Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன ஆணுறை போதையா..? தினுசு தினுசா யோசிப்பாங்களோ!!

Sekar July 25, 2022 & 17:15 [IST]
என்ன ஆணுறை போதையா..? தினுசு தினுசா யோசிப்பாங்களோ!! Representative Image.

மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சில மாணவர்கள் ஆணுறைக்கு அடிமையாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தடையாகப் பயன்படுத்த வேண்டியவை இந்த மாணவர்களால் போதைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மேற்குவங்கத்தின் துர்காபூரில் உள்ள துர்காபூர் சிட்டி சென்டர், பிதான்நகர், முச்சிபாரா மற்றும் பெனாச்சிட்டி, சி மண்டலம், ஏ மண்டலம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகளின் விற்பனை சமீபத்தில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்கள் ஆணுறைகளை வெந்நீரில் ஊறவைத்தால், அது சுமார் 10 முதல் 12 மணி நேரம் நீடிக்கும் ஒரு வகையான போதை திரவமாக மாறுவதாகக் கூறப்படுகிறது. இதை குடித்து மாணவர்கள் போதையடைவதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

துர்காபூரில் உள்ள ஒரு மருத்துவக் கடையின் கடைக்காரர்கள் இது குறித்து கூறுகையில், “முன்பு ஒரு கடைக்கு மூன்று முதல் நான்கு பாக்கெட் ஆணுறைகள் விற்கப்பட்டன. இப்போது ஒரு கடையில் இருந்து ஒரு பேக் ஆணுறை விற்கப்பட்டு வருகிறது." என்றனர்.

துர்காபூர் ஆர்இ கல்லூரி மாதிரி பள்ளி வேதியியல் ஆசிரியர் நூருல் ஹக் கூறுகையில், “ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால் பெரிய கரிம மூலக்கூறுகள் உடைந்து ஆல்கஹால் கலவைகள் உருவாகின்றன. இந்த கலவை இளைஞர்களை போதையில் வைக்கிறது." எனத் தெரிவித்து, அதில் போதை தொடர்பான விஷயம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

துர்காபூர் துணை மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் திமான் மண்டல் பங்களாஹன்ட்டிடம் பேசுகையில், “ஆணுறையில் ஒருவித நறுமண கலவை உள்ளது. அதை உடைப்பதன் மூலம் மது உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நறுமண கலவை டென்ட்ரைட்டுகளிலும் காணப்படுகிறது. பலர் டென்ட்ரைட்டுகளால் போதையில் இருப்பதைக் காணலாம்." என்றார்.

முன்னதாக இருமல் சிரப், ஆஃப்டர் ஷேவ் கிரீம், பெயிண்ட் போன்றவற்றை போதைப்பொருளாக பயன்படுத்துவதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஆணுறையும் இணைந்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்திய தண்டனைச் சட்டத்தில் இதற்கு எதிராக எந்த குறிப்பிட்ட சட்டங்களும் இல்லை என்பதால், இது குறித்து அவர்களால் பதிவு செய்ய முடியாது.

ஒயிட்னர்கள், இருமல் சிரப்கள் உள்ளிட்டவற்றில் போதையின் அளவு குறைவாக இருப்பதாகல் அவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் சட்டத்தின் (NPDS Act) ஒரு பகுதியாக கருதப்படுவதில்லை என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்