Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Coimbatore - MGR Chennai Central Vande Bharat Train

Priyanka Hochumin Updated:
கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Coimbatore - MGR Chennai Central Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wifi வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

ஏப்ரல் 8, 2023 அன்றிலிருந்து இந்தியாவின்  13வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோவையில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இந்த பதிவில் கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி செல்லும் இந்த ரயில் கோவை சந்திப்பு, திருப்பூர், ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [495 கி.மீ தூரம்] மற்ற ரயில்களைக் காட்டிலும், வந்தே பாரத் வெறும் 5.50 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20644]

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் [எண்: 20643]

ஏப்ரல் 8, 2023

புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

495 கிமீ

5.50 மணி நேரம்

06.00 AM - 11.50 AM

 

02.25 PM – 08.15 PM

 

கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்: 20644]: 

தினமும் காலை 6.00 மணிக்கு கோவை சந்திப்பில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 06.35 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தையும், காலை 07.12 மணிக்கு ஈரோடு சந்திப்பையும், காலை 07.58-க்கு சேலம் சந்திப்பையும் சென்றடையும். பின்னர், காலை 08.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 11.50 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20644]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

கோவை சந்திப்பு

-

06.00 AM

திருப்பூர்

06.35 AM

06.37 AM

ஈரோடு சந்திப்பு

07.12 AM

      07.15 AM

சேலம் சந்திப்பு

07.58 AM

08.00 AM

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்

11.50 AM

-

 

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் நேர அட்டவனை [எண்:20643]:

மறுமார்க்கமாக எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 02.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 08.15 மணிக்கு கோவை சந்திப்பையும் வந்தடையும்.

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் [எண்: 20643]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்

-

02.25 PM

சேலம் சந்திப்பு

05.48 PM

05.50 PM

ஈரோடு சந்திப்பு

06.32 PM

06.35 PM

திருப்பூர்

07.13 PM

07.15 PM

கோவை சந்திப்பு

08.15 PM

-


கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் கோவை  முதல் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரை செல்ல சேர் காரில் ரூ.1,215 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2,310 வசூலிக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் போபால் வரை கோவை செல்ல சேர் காரில் உணவுடன்  சேர்த்து ரூ.1,365 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவுடன்  சேர்த்து ரூ.2485 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் [எண்: 20644]

ரூ.1058

ரூ.2120

ரூ.1215

ரூ.2310

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் [எண்: 20643]

ரூ.1057

ரூ.2116

ரூ.1365

ரூ.2485


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்