Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவில் வளாகத்தில் இறைச்சித் துண்டு.. மர்ம நபர்களால் மதமோதல் வெடிக்கும் அபாயம்!!

Sekar July 17, 2022 & 10:07 [IST]
கோவில் வளாகத்தில் இறைச்சித் துண்டு.. மர்ம நபர்களால் மதமோதல் வெடிக்கும் அபாயம்!!Representative Image.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இறைச்சி துண்டுகளை கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் வீசி எறிந்ததை அடுத்து அங்கு வகுப்புவாத மோதல் வெடித்தது. 

இறைச்சித் துண்டுகள் வீசியதோடு, இரண்டு இடங்களில் சிலைகளை அவமதிப்பும் செய்துள்ளனர். இது போராட்டத்திற்கு வழிவகுத்தது, இதன் போது பல கடைகள் தீவைக்கப்பட்டன. வன்முறையில் மயானத்தின் கதவும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கன்னோஜ் மாவட்டத்தின் தல்கிராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரசூலாபாத் கிராமத்தில், கோவில் பூசாரி ஜெகதீஷ் சந்திரா, கோவிலுக்குள் இறைச்சி துண்டுகளை கண்டுபிடித்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சர்க்கிள் அதிகாரி ஷிவ் பிரதாப் சிங் மற்றும் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஹரி ஷியாம் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முழு இடத்தையும் சுத்தம் செய்தனர். எனினும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மௌனம் சாதிப்பதாக குற்றம் சாட்டி ஒரு கும்பல் சாலையில் திரண்டது. பின்னர் அவர்கள் தல்கிராம் - இந்தர்கர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் இந்த சாலை மறியல் நீடித்த நிலையில், போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். முற்றுகை விலக்கப்பட்டதையடுத்து, இரண்டு இடங்களில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதனால் கும்பல் கோபமடைந்து நான்கு கடைகளை எரித்ததுடன், கல்லறைக்குள் நுழைந்து அதன் கேட்டை சேதப்படுத்தியது.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து நேற்று மாலையில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் (கான்பூர் ரேஞ்ச்), பிரசாந்த் குமார் மற்றும் கமிஷனர் (கான்பூர் பிரிவு), ராஜ் சேகர் ஆகியோரும் தல்கிராம் சென்றடைந்தனர். காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் கூறியதுடன், நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்