Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால்....எவ்வளவு நிவாரணம் கிடைக்கும் தெரியுமா?

madhankumar July 16, 2022 & 16:10 [IST]
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால்....எவ்வளவு நிவாரணம் கிடைக்கும் தெரியுமா?Representative Image.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூரைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு பாலாஜி என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பாடி அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டேன் ஆனாலும் நான் கர்பமானதால் எனது உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாடி மருத்துவானைக்கு சென்று முறையிடும் எந்த பதிலும் கிடைக்கவில்லை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்ப கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டது போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குடும்ப காப்பீடு திட்டத்தில் கீழ் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்து விட்டால் அவருக்கு அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மாத காலத்திற்குள் இறந்துவிட்டால் ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான ரூ. 30 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அரசாணையைத் தாக்கல் செய்தார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் எனக் கூறி உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்