Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தற்காலிக ஆசிரியர் பணி...போட்டி தேர்வுகளில் திடீர் மாற்றம்..!

madhankumar July 08, 2022 & 11:15 [IST]
தற்காலிக ஆசிரியர் பணி...போட்டி தேர்வுகளில் திடீர் மாற்றம்..!Representative Image.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 24 மாவட்டங்களில் இருந்து 1.5 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்காலிக ஆசிரியர் காலி பணியிடங்களில் 13,331 பேருக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு கையில் எடுத்தது. இதைத்தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 13,391 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

இந்நிலையில் அறிவிக்கப்பட்டிருந்த 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் 5,063 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 13,331 ஆக இருந்த பணியிடங்கள் 8,268ஆக குறைக்கப்பட்டு அவற்றிக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்