Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க ஏரியாவில் வெள்ளநீர் தேங்கியிருக்கிறதா?..! உதவி எண்ணை அறிவித்த செங்கல்பட்டு ஆட்சியர்..!!

Saraswathi Updated:
உங்க ஏரியாவில் வெள்ளநீர் தேங்கியிருக்கிறதா?..! உதவி எண்ணை அறிவித்த செங்கல்பட்டு ஆட்சியர்..!!Representative Image.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் தங்களது பகுதியில் வெள்ளநீர் தேங்கினால், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பதற்கான வாட்ஸ்-அப் உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.  
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை எட்டு மணி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 27.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில்,  269 பவர் ஜெனரேட்டர்கள், 366 பவர் ரம்மங்கள் ,173 ஜேசிபி வாகனங்கள், 91 தண்ணீர் லாரிகள் , இதுபோக 4518 மின்கம்பங்கள், 49 டிரான்ஸ்பார்மர்கள், 2046 மின் ஊழியர்கள் ,52 ஆம்புலன்ஸ்கள், 926 மருத்துவ மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள், 80 மீட்பு படகுகள், 60 தண்ணீரை வெளியேற்றும் பழுப்புகள், 1756 டார்ச் லைட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கனமழையால், வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில்,  290 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை தொடர்புடைய துறைகள் மூலம் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட நிர்வாகத்தின் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் 1077, 044 -27427412, 044 -27427412, வாட்ஸ்-அப்:- 9444272345 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்