Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Cooking oil price : சமையல் எண்ணெய் விலை குறைவு..? மத்திய அரசு அதிரடி...!

Muthu Kumar July 07, 2022 & 09:30 [IST]
Cooking oil price : சமையல் எண்ணெய் விலை குறைவு..? மத்திய அரசு அதிரடி...!Representative Image.

Cooking oil price : இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் நிலையில் சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ரஷ்யா போர் மற்றும் சில காரணங்களால் சமையல் எண்ணெய் வகைகள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் 60% சமையல் எண்ணெய்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எண்ணெய் விலையை உயர்த்தியது.

இந்நிலையில், உலக சந்தையில் தற்போது சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைக்கவில்லை. மேலும், இதுகுறித்து இந்தியாவில் உள்ள அணைத்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய உணவு செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

மேலும், இந்த கூட்டத்தில் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் எண்ணெய் விலையை ஒரே மாதிரியான விலையில் விற்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதை கணக்கிட்டு இந்தியாவிலும் 10 ருபாய் வரை விலையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த குட்டத்தில் கூறிய அணைத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். மேலும், இதனால் இந்த வாரத்தில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை குறைந்தால் மற்ற எண்ணெய்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்