Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தாடி....ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா..!....மக்களே உஷாரா இருங்க..!

madhankumar June 30, 2022 & 11:27 [IST]
ஆத்தாடி....ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா..!....மக்களே உஷாரா இருங்க..!Representative Image.

நாடு முழுவது கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்த பின்னர் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்கிறான் தொற்று பரவ தொடங்கியது இது கொரோனா மூன்றாவது அலையாக கருதப்பட்டது. ஆனால் இது டெல்டாவை போல அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை. இது மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் மீண்டும் நாட்டில் கொரோனா தொற்றானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பரவல் படிப்படியாக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், பரவ தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 14,500 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 18,819 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 164 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 116 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,827 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 88 ஆயிரத்து 284 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,97,61,91,554 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 14,17,217 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்