Tamilnadu News Live : தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 686 என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,61,560 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட 257 pஏர் குணமடைந்து வீடு திரும்யுள்ளனர். மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…