Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு...!

madhankumar August 03, 2022 & 10:50 [IST]
இன்று முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு...!Representative Image.

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல பொது மக்களும் வியாபாரிகளும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். மேலும் இன்று ஏற்றிவிட்டால் மறுநாளே சேர வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் தனியார் போக்குவரத்தையே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை இந்த முறையை அறிமுகப்படுத்தியது, ஏற்கனவே அரசு பேருந்துகளில் பார்சல் சேவை இருந்துவந்தாலும் அது சரியான விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் மட்டும் இனி பார்சல்களை அனுப்ப முடியும். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும்.

முதல் கட்டமாக 7 நகரங்களில் மட்டும் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, ஓசூர், கோவை, செங்கோட்டை ஆகிய நகரங்களில் ருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப முடியும். இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு பேருந்துகளின் மேல் பார்சல்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் அதிகபட்சம் 80 கிலோ வரை மட்டுமே பார்சல் அனுப்ப முடியும், 80 கிலோ வரையிலான பார்சல் அனைத்திற்கும் ஒரே விலை ஆகும். திருச்சியில் இருந்து சென்னைக்கு பார்சல் அனுப்ப 210 ரூபாய் ஆகும். இதேபோல் மற்ற நகரங்களுக்கு 230, 300 என்ற அளவில் பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மாத கட்டணமும் செலுத்தி தினமும் கூட பார்சல் அனுப்ப முடியும். வாராந்திர கட்டண முறையும் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்