Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு...நீதிமன்றம் அதிரடி..!

madhankumar July 18, 2022 & 11:49 [IST]
மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு...நீதிமன்றம் அதிரடி..!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தது தொடர்பாக மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்து அவர்களுடன் இணைந்த மாணவர் அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து பள்ளியை சூறையாடினர். அப்போது அணு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தும் காவல்துறை வாகனங்களை எரித்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த கலவரத்தில் அடையாளம் காணப்பட்ட 329 பேர் கைதுசெய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அதில் மாணவர்களின் டி.சி யை எரித்தது யார்? யார் இதற்கான உரிமையை கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வன்முறை திடீர் கோபத்தால் ஏற்பட்ட வன்முறை போல் தெரியவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. 

இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்? நீதிமன்றத்தை நாடிவிட்டு ஏன் போராட்டதை கையில் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்பொழுது மனுதாரர் (ராமலிங்கம்) தரப்பில் வன்முறைக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன் பின்னரே மாணவியின் உடலை தரவேண்டும் என கூறியுள்ளனர். மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவில் டாக்டர்.கீதாஞ்சலி - விழுப்புரம் அரசு மருத்துவமனை, டாக்டர்.ஜூலியான ஜெயந்தி - திருச்சி அரசு மருத்துவமனை, டாக்டர்.கோகுலநாதன் - சேலம் அரசு மருத்துவமனை, சாந்தகுமாரி - தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் ஆகியயோர் இடம்பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்