Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்....கலைவாணர் அரங்கில் சிறப்பு ஏற்பாடு..!

madhankumar July 18, 2022 & 11:22 [IST]
தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்....கலைவாணர் அரங்கில் சிறப்பு ஏற்பாடு..!Representative Image.

மறைந்த தமிழ்நாடு முதல்வர் அறிஞர் அண்ணா சென்னை மாகாணத்திற்கு ஜூலை 18 1967 அன்று தமிழ்நாடு என பெயர் வாய்த்த நாள் "தமிழ்நாட்டு நாள்" என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், “தமிழ்நாடு உருவான வரலாறு”, ஆழி செந்தில்நாதன், “மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவன், “தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்”, முனைவர் ம. இராசேந்திரன், “தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், “முத்தமிழறிஞர் கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு” ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை ( 18.07.2022) முதல் 20.07.2022 வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கண்காட்சிகளை பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்