Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்.. புதிய மைல்கல்லை எட்டும் இந்தியா!!

Sekar June 26, 2022 & 18:09 [IST]
200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்.. புதிய மைல்கல்லை எட்டும் இந்தியா!!Representative Image.

இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதை நெருங்கி வருவதாக பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை டோஸ் நாட்டில் வேகமாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மோடி கூறினார்.

மோடி தனது மாதாந்திர மான் கி பாத் நிகழ்ச்சியின் 90வது பதிப்பில் இன்று பேசியபோது, "கொரோனாவுக்கு எதிராக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருப்பினும், இன்று நாட்டில் தடுப்பூசியின் விரிவான பாதுகாப்பு கவசம் உள்ளது என்பது திருப்தி அளிக்கிறது. 

200 கோடி தடுப்பூசி அளவை நெருங்கியுள்ளோம். முன்னெச்சரிக்கை டோஸும் நாட்டில் வேகமாக செலுத்தப்படுகிறது. உங்கள் இரண்டாவது டோஸுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை டோஸ் எடுக்க வேண்டிய நேரம் இது என்றால், நீங்கள் இந்த மூன்றாவது டோஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக வயதானவர்களை, முன்னெச்சரிக்கையாக டோஸ் எடுக்கச் செய்யுங்கள்.” என்று கூறினார்.

கை சுகாதாரம் மற்றும் முககவசம் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மழைக்காலத்தில் சுற்றியுள்ள அசுத்தங்களால் ஏற்படும் நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் பிரதமர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

தடுப்பூசிகள் அதிக அளவில் கிடைப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் கிடைப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வது மற்றும் தடுப்பூசி விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

இன்று காலை 7 மணி வரை தற்காலிக அறிக்கைகளின்படி, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கவரேஜ் 197.08 கோடியை (1,97,08,51,580) தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்