Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்..!

madhankumar July 10, 2022 & 14:20 [IST]
அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்..!Representative Image.

இலங்கையில் வரலாறு காணாத பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் அனைவரும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த மாதத்தில் போராட்டம் வெடித்தது. பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச விலகினார். அவரை தொடர்ந்து , ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

ஆனால் அவர் பதவியேற்ற பின்னரும் பொருளாதார சிக்கல் விலகியதாக தெரியவில்லை, மேலும் அதிகருதுதான் காணப்படுகிறது. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் அங்கு காலவரையற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் இன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் மக்கள் அதனை மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை சூறையாடப்படுவதாகவும், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மாளிகையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பல்வேறு நபர்க ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை சூறையாடினர். தலைமை செயலகத்தையும்  போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.  கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் அறை அலமாரியில் சுமார் 17 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

கிடைத்த பணத்தை போராட்டக்காரர்கள் சரியாக எண்ணி உரிய பொறுப்பு வாய்ந்த துறைகளிடம் ஒப்படைத்திருப்பது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இது குறித்து  ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரியும்  பணம் பெறப்பட்டதை உறுதி செய்துள்ளார். மேலும் அந்த பணம் அங்கு எதற்காக வைக்கப்பட்டிருந்தது என்ற விசாரணை நடந்துவருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்