Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடலூரை புரட்டிப்போட்ட மாண்டஸ்; கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு! 

Kanimozhi Updated:
கடலூரை புரட்டிப்போட்ட மாண்டஸ்; கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு! Representative Image.

 

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் கடலூரில் பல்வேறு மீனவ கிராம பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்துள்ளது. 

மாண்டஸ் புயலால் தாழங்குடா,சோனங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சோனங்குப்பம் பகுதியில் கடல் நீர் 100 மீட்டர் அளவிற்கு உள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் கடலூர் பகுதியில் புயல் காரணமாக குண்டு உப்பலவாடி, பாரதி சாலை  உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்றி பாதிப்பை சீர் செய்தது. 

மேலும் கடலூர் வெள்ளி கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா நீரில் மூழ்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேரிகார்டுகள் சாலைகளில் சாய்ந்துள்ளது. மேலும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பாதுகாப்பாக உள்ளன. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக ஏற்பட்ட எச்சரிக்கை கொடி எண் 5 தற்போது புயல் கரையை கடந்ததால் அதிகாலை இறக்கப்பட்டது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்