Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புயல் கரையைக் கடக்க ஆரம்பிச்சாச்சு; இதையெல்லாம் மறந்தும் செஞ்சிடாதீங்க!

Kanimozhi Updated:
புயல் கரையைக் கடக்க ஆரம்பிச்சாச்சு; இதையெல்லாம் மறந்தும் செஞ்சிடாதீங்க!Representative Image.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் மாண்டஸ் புயலானது, மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கு திசையில் 60 கிலோ மீட்டர் தொலைவில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை துறை புயல் சமயத்தில் என்னென்ன விஷயங்களை செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ... 

மக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?

  • ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  • பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி  மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதோடு, வதந்திகளை நம்பக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து  கவனிக்க வேண்டும்.
  • கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்து வைக்கவேண்டும்.
  • வீட்டை விட்டு வெளியேறும் போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இறுக்கமாக முடப்பட்டுள்ளனவா என்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • வீட்டின் மின் இணைப்பு மற்றும் சுவிட்சுகளை அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
  • மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள்  அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை: 

  • இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
  • பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  •  புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை  முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்