Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணி, நூல் ஏற்றுமதி சரிவு எதிரொலி - நூற்பாலைகள் நாளை முதல் உற்பத்தி நிறுத்த அறிவிப்பு

Saraswathi Updated:
துணி, நூல் ஏற்றுமதி சரிவு எதிரொலி - நூற்பாலைகள் நாளை முதல் உற்பத்தி நிறுத்த அறிவிப்பு Representative Image.

துணி மற்றும் நூல் ஏற்றுமதி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிந்துள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை முதல் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நூற்பாலைகள் சந்தித்து வரும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் நாளை முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்ய சிறு,குறு மற்றும் நடுத்த நூற்பாலைகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாளை முதல் தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால், நாள் ஒன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும். 85 கோடி ரூபாய் வரை வருவாய் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இந்தத் தொழிலை நம்பியுள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. 

கோவையில் இது தொடர்பாக தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பு கவுரவச் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி 28 சதவீதம்  சரிந்துள்ளது. பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை 2 ரூபாய்க்குப் பதிலாக ஒரு ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால், கிலோவுக்கு ரூ. 40 வரையும், 10 ஆயிரம் ஸ்பின்டில்கள் கொண்ட ஒரு ஆலைக்கு நாளொன்றுக்கு ரூ. 1 லட்சமும் இழப்பு ஏற்படுகிறது. 

இதனால் வங்கிக்கடன், பஞ்சு கொள்முதல் பணம், மின்கட்டணம், ஜிஎஸ்டி, பி.எப் போன்றவற்றை கட்டமுடியாத சூழல் உருவாகியுள்ளது. நூற்பாலைகளின் இந்த நஷ்டத்தை தவிர்க்க பஞ்சின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களை 7.5 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும். ஜவுளி நூற்புத் தொழிலுக்கு ஒரே நாடு, ஒரே கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 2022ம் ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து நூற்பாலைத் தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்