Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாவட்டந்தோறும் 'ஹெல்த் வாக் திட்டம்' - மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Saraswathi Updated:
மாவட்டந்தோறும் 'ஹெல்த் வாக் திட்டம்'  - மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு Representative Image.

தமிழகத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹெல்த் வாக் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதன்படி, மாவட்டத்துக்கு ஒரு நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவிய கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் நடைபயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். கிராமப்புற மக்கள் இதை எளிதாக செயல்படுத்துவதுபோல்,  நகர்ப்புறங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான இடங்கள் அவ்வளவாக இல்லை. இதனால், உடல் நலனை பாதுகாத்துகொள்ளும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன்ர்.  

இதற்கு தீர்வு காணும் வகையிலும், மக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘ஹெல்த் வாக்’ என்னும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு நடைபாதை என்ற அடிப்படையில், 38 மாவட்டங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைக்கப்படவுள்ளன.  

மேலும், இந்த திட்டத்தின்கீழ் நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் இடத்தில், குடிநீர், இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படுவதோடு,  மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கான பராமரிப்புப் பணிகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவுள்ளன.  

அந்த வகையில், மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபயிற்சி பாதை அமையவுள்ள இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.  
மதுரை மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து சுகாதார நடைபாதை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மேலும், மதுரையில் சுகாதார நடைபாதை அமைக்க ரேஸ்கோர்ஸ் சுற்றுச் சாலை தேர்வு செய்யப்படும் என்றும்,  இங்கு சிமெண்ட் கற்கள் பதித்து, நடப்பதற்கென தனிப் பாதை அமைக்கப்படுவதோடு,  இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு,  இந்த நடைபாதை வழியில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாமல், குப்பைகள் இல்லாமலும் பராமரிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  

அதுமட்டுமின்றி, இந்த நடைபயிற்சி பாதையை  பயன்படுத்தும் மக்கள்,  எத்தனை கி.மீ. நடைப்பயிற்சி மேற்கொண்டோம் என்பதை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில்,  ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தூரத்தைக் குறிக்கும் பலகைகள் நிரந்தரமாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்