Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த அதிரடி.. திமுக அமைச்சரின் அண்ணன் மகனை கட்சியில் இணைத்த பாஜக!!

Sekar June 16, 2022 & 10:07 [IST]
அடுத்த அதிரடி.. திமுக அமைச்சரின் அண்ணன் மகனை கட்சியில் இணைத்த பாஜக!!Representative Image.

தமிழகத்தில் திமுக மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில், திமுக அமைச்சரின் அண்ணன் மகன் ஒருவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முத்தூரில் திமுகவின் இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருபவர் விசாகன். திமுக இளைஞரணி அமைப்பாளராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர் தற்போதைய திமுக அரசில் செய்தித்துறை அமைச்சராக இருக்கும் வெள்ளகோவில் சாமிநாதனின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் உறவின் முறையில் வெள்ளகோவில் சாமிநாதனின் அண்ணன் மகனும் கூட.

திமுகவில் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் பேரன், திருச்சி சிவாவின் மகன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் பாஜகவில் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், தற்போது அமைச்சரின் சொந்த ஊரைச் சேர்ந்தவரும் உறவின் முறையில் அண்ணன் மகனுமான விசாகன் கட்சி மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முக்கிய தலைவர்களுடன் தொடர்புடையவர்கள் பலரும் பாஜகவின் ஐக்கியமாகி வருவது திமுக தலைமையிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்