Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுமனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா? - ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!

KANIMOZHI Updated:
வீட்டுமனைகளுக்கு முறையான அனுமதி உள்ளதா? - ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!Representative Image.

நீலகிரி மாவட்டத்தில் அதிக இடங்களில் விவசாய நிலங்களை அழித்து அனுமதியற்ற வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருவதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் வீட்டு மனைகளுக்கு முறையான அனுமதி  உள்ளதா? என்பதை உறுதி செய்த பின் பொது மக்கள் வீட்டு மனைகளை வாங்குமாறு மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் அறிவித்துள்ளார். 

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அனுமதியற்ற கட்டிடங்கள் என உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சிகளில் 57 கட்டிடங்களும்  பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தலா 1 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கபட்டுள்ளதாகவும்  அனுமதிக்கு மாறாக கட்டிடங்களை கட்டியதாக உதகை, குன்னூர்  மற்றும் கூடலூர் நகராட்சி ஆகிய நகராட்சி பகுதிகளில்  19 கட்டிடங்களும், பேரூராட்சி பகுதிகளில் 31 கட்டிடமும் ஊராட்சி பகுதிகளில் 30 கட்டிடமும்   கண்டுபிடிக்கபட்டு சீல் வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உள்ளாட்சியிடம்  குடியிருப்பு கட்டிட  அனுமதி பெற்று கட்டங்களை கட்டி  வணிக ரீதியாக  செயல்பட்டு வரும் 81 கட்டிடங்களுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து அனுமதியற்ற மனைப்பிரிவுகளை உருவாக்கி விற்பனை செய்யப்பட்ட 13 மனைப்பிரிவுகளுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கபட்டுள்ளதாகவும் மாவட்ட அளவிலான கட்டிடக்குழுக் கூட்டத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட கட்டிட உரிம  விண்ணப்பங்களில் மூன்று துறைகளின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு  1207 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

 மேலும் விதிகளை மீறி வரைபடம் தயாரிக்கும் கட்டிட பொறியாளர் மீது  நடவடிக்கை எடுக்கபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்