Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

World News Tamil: என்னாது நாய் சாப்பிடுற உணவை சாப்பிடுறதுக்கு ரூ. 5 லட்சம் சம்பளமா...!!! 

Nandhinipriya Ganeshan May 21, 2022 & 13:00 [IST]
World News Tamil: என்னாது நாய் சாப்பிடுற உணவை சாப்பிடுறதுக்கு ரூ. 5 லட்சம் சம்பளமா...!!! Representative Image.

World News Tamil: இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் "ஆம்னி" என்ற நிறுவனம் தாவர வகையிலான நாய் உணவுகளை தயாரித்து வருகிறது. தங்களுடைய தயாரிப்பை சுவைத்து அதுபற்றிய விவரங்களை தருவதற்கு சம்பளம் தருகிறதாம். அந்த உணவில் ப்ருப்புகள், இனிப்பு உருளை கிழங்குகள், பூசணிக்காய் போன்ற காய்களும், கிரான்பெர்ரி, புளூபெர்ரி போன்ற பழங்களும், பழுப்பு அரிசி, பட்டாணி அரசி போன்றவையும் கலந்துதிருக்குமாம். 

மேலும், இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று எந்தவொரு தனித்தகுதிகளும் கிடையாதாம். எனினும், நாய் உணவை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் அதாவது ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் நிறுவனத்திடன் தெரிவிக்க வேண்டும். 

அதன்படி, நாய் உணவை 5 நாட்கள் சாப்பிட வேண்டும். அதன்பின், உங்களுடைய அனுபவம், உணவின் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, வயிற்றில் உணவின் இயக்கம், மனநிலை போன்றவற்றை எப்படி நீங்கள் உனர்ந்தீர்கள்? என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமாம். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும்போது, ஆம்னி பொருட்கள் தூய்மையானவை. அதில் ரகசிய பொருட்கள் எதுவும் கலக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சட்டப்படி, அனைத்து நாய் உணவும் மனிதர்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களையே கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில தயாரிப்புகளில் விலங்குகளின் மலிவான உப பொருட்கள் சேர்க்கப்படும். மனிதர்கள் உண்டு மீதமுள்ள விரும்பத்தகாத உணவுகளும் சேர்க்கப்படுவதுண்டு. இதனை மனிதர்களுக்கு கொடுக்கும்போது நிச்சயம் அவர்கள் விரும்புவது கிடையாது.

ஆனால், ஆம்னி உணவு பொருட்கள் மனிதர்கள் கூட உண்பதற்கு ஏற்றவை. அதனாலேயே, எங்களது தயாரிப்புகளை சுவைத்து பார்ப்பதற்காகவும், அவை எவ்வளவு சுவை வாய்ந்தது மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தாவரம் சார்ந்த உணவு என்று நிரூபிப்பதற்காகவும், நாங்கள் அதற்கான ஆட்களை பணிக்கு அமர்த்துகிறோம் என்று அந்நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உணவுகளை நான் மற்றும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் கூட உண்போம் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார். 

இதில் ஹைட் லைட் என்னவென்றால், இதுவும் ஒரு வேலை என்று நினைத்து இதையும் விளம்பரம் செய்திருப்பது தான் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்