Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பின்லாந்துக்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா

Bala May 21, 2022 & 12:17 [IST]
பின்லாந்துக்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யாRepresentative Image.

எரிவாயுவை இமாட்ரா வழியாக பின்லாந்துக்கு ஏற்றுமதி செய்து வந்ததை ரஷ்யா நிறுத்தியுள்ளது. 

ரஷ்யா-உக்ரைன் உடனான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி போரை ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவீடன் மற்ரும் பின்லாந்து நேட்டோவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ரஷ்யா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்லாந்து, சுவீடன் நேட்டோவில் இணைந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா நேரடியாக எச்சரித்தது.

இதனைதொடர்ந்து ரஷ்ய மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயு விநியோகங்களுக்கு ரூபிள்களில் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், பின்லாந்து இதற்கு உடன்படாததால் ரஷ்யா பின்லாந்துக்கு விநியோகித்த வந்த எரிவாயுவை இன்று நிறுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்