Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

பிரபல செய்தி தொகுப்பாளர் காலமானார்...! சோகத்தில் குடும்பத்தினர்.. | DD Anchor Gitanjali Aiyar

Gowthami Subramani Updated:
பிரபல செய்தி தொகுப்பாளர் காலமானார்...! சோகத்தில் குடும்பத்தினர்.. | DD Anchor Gitanjali AiyarRepresentative Image.

பிரபல செய்தி நிறுவனமாக விளங்கும் தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் நேற்று காலமானார். இவருக்கு வயது 71. இவர், தூர்தர்சன் செய்தி தொகுப்பாளராக, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார்.

யார் இந்த கீதாஞ்சலி ஐயர்

கீதாஞ்சலி ஐயர், கொல்கத்தாவில் உள்ள லொரேட்டோ கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். இவர், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பயின்றார். மேலும், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் டிப்ளமோ படிப்பையும் முடித்தார்.

அதன் பிறகு, 1971 ஆம் ஆண்டில் தூர்தர்ஷனில் சேர்ந்தார். 1978 ஆம் ஆண்டில், இந்தியா ரேடியோவில் இருந்து பிரிந்த சமயத்தில், இவர் தூர்தர்ஷனிலேயே இருந்தார். தனது 31 ஆண்டு கால வாழ்க்கையை செய்தி நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகவே அர்ப்பணித்தவர் இவர். மேலும், செய்தி நிகழ்ச்சிகளைத் தவிர 1985-ல் தூர்தர்ஷனில் கந்தான் என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியாக விளங்கினார்.

மேலும் இவர், தி ஓபராய் குழுமம், யாஷ் பிர்லா குழுமம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு போன்றவற்றில் பணிபுரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பத்திரிக்கை மற்றும் பொது விவகாரப் பிரிவின் துணைத் தலைவராக ஐயர் கீதாஞ்சலி ஐயர் பொறுப்பேற்றார். இவர் உலக வனவிலங்கு நிதியத்தில் முக்கிய நன்கொடையாளர்கள் துறையில் இவர் இருந்தார்.

அது மட்டுமின்றி, சிறந்த தொகுப்பாளருக்கான விருதாக நான்கு முறை விருது வென்ற பெண்மணி ஆவார். 1989-ஆம் ஆண்டில் பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் இவர் பெற்ரார்.

இவரது மறைவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும், மூத்த பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்