Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,895.44
899.13sensex(1.23%)
நிஃப்டி22,415.30
291.65sensex(1.32%)
USD
81.57
Exclusive

16,000 இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம் | Dr Gaurav Gandhi Died of Heart Attack

Priyanka Hochumin Updated:
16,000 இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம் | Dr Gaurav Gandhi Died of Heart AttackRepresentative Image.

இந்தியாவின் மிகவும் பிரசேத்திபெற்ற இருதய மருத்துவர் டாக்டர் கவுரவ் காந்தி மாரடைப்பால் ஜூன் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.

41 வயதான டாக்டர் கவுரவ் காந்தி, கடந்த ஒரு வருடமாக எம்.பி. ஷா அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த உதவி பேராசிரியராக இருந்தார். அது மட்டும் இன்றி இருதயவியல் கற்பித்தல், மருத்துவமனையில் OPD மற்றும் ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் ஜாம்நகரில் உள்ள தனியார் சாரதா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மார்பில் சற்று வலி இருப்பதை உணர்ந்தார். உடனே சாராத மருத்துவமனையில் ECG எடுத்து பார்த்ததில் எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று நம்பினார். ஒருவேளை அசிடிட்டியாக இருக்கும் என்று எண்ணி, ஊசி போட்டுகொண்டு அரை மணி நேரம் ஒய்வு பெற்றார். எந்த முரண்பாடுகளும் இல்லை என்ற உடன் வீடு திரும்பினார்.

காலை 6 மணியளவில் பாத்ரூம் தரையில் கவுரவ் விழுந்து கிடந்ததை பார்த்த அவரின் மனைவி உடனே அவரை ஜிஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை வென்டிலேட்டரில் வைத்து, கார்டியோகிராம் செய்து பார்த்தனர். அவரின் இதயம் பலவீனமாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் அவருக்கு 45 நிமிடம் CPR செய்து முயற்சித்தனர். இறுதியில் எவ்ளோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இவரின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என்று சந்தேகிக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாரடைப்பிற்கான எந்த அறிகுறியும் அவரின் இதயம் காட்டவில்லை. மேலும் குறுகிய நேரத்தில் இதயத்தில் அந்த மாற்றங்கள் தென்படாது என்று மருத்துவர்கள் கூறினர்.  

இவர் இதுவரை 16,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். மேலும் இவரின் மறைவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் இருக்கும் பலர் தங்களின் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்