Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொரோனா பீதி: ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
கொரோனா பீதி: ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு! Representative Image.

கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையும் புரட்டி போட்டு வரும் கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், சீனாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும் ஒமைக்ரானின் பிஎப்.7 என்ற புதிய வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. 

இந்தியாவிலும் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடைமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் விமான நிறுவனங்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகேயுள்ள சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையத்தில் சீரற்ற சோதனைகள் இருக்காது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்