Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி ; திகுதிகுவென தீ பரவும் கோர காட்சிகள்! 

KANIMOZHI Updated:
வெடித்துச் சிதறிய டேங்கர் லாரி ; திகுதிகுவென தீ பரவும் கோர காட்சிகள்! Representative Image.

தென்னாப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தீப்பற்றிய டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் அருகேயுள்ள போக்ஸ்பர்க் என்ற நகரின் மருத்துவமனைக்கு அருகே டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் இருந்த தாழ்வான பாலத்தை கடந்த போது திடீரென எரிவாயு நிரப்பி வந்த டேங்கர் லாரி தீ பிடித்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்த போது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. 

இந்த கோர விபத்தில் நேற்று வரை 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தால் டாம்போ மெமோரியல் மருத்துவமனை பலத்த சேதமடைந்ததோடு, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 24 நோயாளிகள் மற்றும் 13 ஊழியர்கள் உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

#viralvdoz#BREAKING #SOUTH AFRICA :#VIDEO FUEL TANKER EXPLOSION IN EAST OF JOHANNESBURG claimed 15 lives. The #tanker, transporting #LPG, was caught beneath a bridge on Dec 24. #BreakingNews #UltimaHora #SudAfrica #AfriqueDSud #Johannesburg #Explosion #GasExplosion pic.twitter.com/NPmwYNvdk3

— ViralVdoz (@viralvdoz) December 26, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்