Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, டெல்லியில் நிலநடுக்கம்..! | Earthquake Tremors In Delhi

Gowthami Subramani Updated:
ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, டெல்லியில் நிலநடுக்கம்..! | Earthquake Tremors In DelhiRepresentative Image.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் உண்டான சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அதிக அளவிலான ரிக்டர் பதிவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஏராளக்கணக்கானோர் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்தும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு மீட்பு பணிகள் நடந்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே கணித்த ஒருவர், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்தார்.

அதன் படியே, டெல்லி மற்றும் அதன் வட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் ஏற்பட்ட நிலையில் காலை 11.23 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், சண்டிகர் மாநிலம் உள்பட பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின் படி, நேற்று அதாவது மே 28, 2023 ஆம் நாள் காலை ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே 5.2 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் மையமானது ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து 79கிமீ தென்கிழக்குப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்திய நேரப்படி 11.19 மணி அளவில் 220 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்