Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அணையில் விழுந்த போனை எடுக்க நீரை அகற்றிய அதிகாரி பணிநீக்கம் | Indian Official Drains Dam for Phone

Priyanka Hochumin Updated:
அணையில் விழுந்த போனை எடுக்க நீரை அகற்றிய அதிகாரி பணிநீக்கம் | Indian Official Drains Dam for PhoneRepresentative Image.

அரசு அதிகாரி ஒருவர் தனது தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தை வடிகட்ட உத்தரவிட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் செல்பீ எடுக்கும் போது சுமார் $1,200 (100,000 ரூபாய்) மதிப்புள்ள தனது சாம்சங் போனை தவறுதலாக கெர்கட்டா அணையில் போட்டு விட்டார். அந்த போனில் அரசு சார்ந்த பல முக்கிய செய்திகள் இருப்பதால் அதனை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார். எனவே, உயர் அதிகாரியிடம் போனில் உத்தரவு வாங்கிய பின்னர் அணையில் இருக்கும் நீரை அருகில் உள்ள கால்வாயில் வெளியேற்ற முயன்றனர்.

இருப்பினும் நீர் தேக்கம் அப்படியே இருந்ததால் தன்னுடைய சொந்த செலவில் டீசல் பம்பைக் கொண்டு நீரை அகற்ற முயன்றனர். சுமார் மூன்று நாட்கள் இரண்டு மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இறுதியாக போனை கைப்பற்றினாலும் நீர் தேக்கம் அதிகமாக இருந்தால் போன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவரின் இந்த செயலால் புகார் பெற்ற நீர்வளத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி வந்து அவரை கண்டித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறும் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ராஜேஷ் அவர்களிடம் கேட்கும் போது, தான் எந்த தவறும் செய்ய வில்லை என்றும், அதிகாரியின் உத்தரவை பெற்ற பின்பு தான் நீரை அகற்றினேன் என்றும், அந்த நீர் வீணாக்காமல் அருகில் உள்ள கால்வாயில் தான் அப்புறப்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்