Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

17 கோடி ரொக்கம்.. அத்தனையும் கணக்கில் வராத பணம்.. கேமிங் ஆப் மோசடி!!

Sekar September 11, 2022 & 11:09 [IST]
17 கோடி ரொக்கம்.. அத்தனையும் கணக்கில் வராத பணம்.. கேமிங் ஆப் மோசடி!!Representative Image.

பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவைச் சேர்ந்த மொபைல் கேமிங் ஆப் நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் சோதனை நடத்திய அமலாக்க இயக்குனரகம் நேற்று கணக்கில் வராத ரூ.17 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கேமிங் ஆப் புரமோட்டர்களின் சில அரசியல் தொடர்புகளை அமலாக்கத்துறை கவனித்து வருவதாகவும், இந்த பணத்தின் உண்மையான பயனாளிகளைக் கண்டறிய விரும்புவதாகவும், இதில் சீனர்களால் கட்டுப்படுத்தப்படும் சில போலி நிறுவனங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

'E-Nuggets' என்ற கேமிங் செயலி மற்றும் அதன் புரமோட்டர் அமீர் கான் மற்றும் பிறருடன் இணைக்கப்பட்ட அரை டஜன் இடங்களில் அதன் தேடல்கள் நடத்தப்பட்டதாக ED ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரூ.2,000, ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளைக் கொண்ட பல பண மூட்டைகளை அமலாக்கத்துறை இந்த சோதனையில் கண்டறிந்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் அமைந்துள்ள ‘எஃப் 7. என் ஏ கான்’ என்ற முகவரியைக் கொண்ட ஒரு வளாகத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்