Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

தமிழக்கத்தில் புகுந்த 'அரிக்கொம்பன்' தாக்கியதில் ஒருவர் படுகாயம் | Arikomban Enters Tamil Nadu

Priyanka Hochumin Updated:
தமிழக்கத்தில் புகுந்த 'அரிக்கொம்பன்' தாக்கியதில் ஒருவர் படுகாயம் | Arikomban Enters Tamil NaduRepresentative Image.

நேற்று தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் 'அரிக்கொம்பன்’ என்ற முரட்டு யானை ஒருவரைத் தாக்கி சொத்துகளை நாசம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சனிக்கிழமையன்று, ஜம்போ முதலில் கேரளாவின் குமிளியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றது. அங்கு ரோசாப்பூகண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அந்த யானை வீட்டை விட்டு வெகுதூரம் சென்றது. பிறகு வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சத்தம் போட்டு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

அதற்கு முன்னர், வெள்ளிக்கிழமை இரவு அரிக்கொம்பன் யானை லோயர் கேம்பை அடைந்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள கழுத்துமுட்டில் பயிர்களை அழித்ததாக கூறப்படுகிறது. ஜம்போவின் ஜிபிஎஸ் காலரைப் பயன்படுத்தி அதனின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த யானையை பிடிக்க முடியவில்லை. எனவே, அப்பகுதியில் இருக்கும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர்.

பின்னர் கேரள எல்லையை ஒட்டிய ஊரை யானை சுற்றி வந்தபோது, பீதியடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக ஓடி வந்தனர். அந்த சமயத்தில் யானை பால்ராஜ் என்பவரை தாக்கியுள்ளது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கம்பம் உள்ளூர் எம்.எல்.ஏ என்.இ.ராமகிருஷ்ணன் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். முதலில் அந்த யானையை சாந்த படுத்தி அப்பகுதியில் இருந்து அப்புற படுத்துங்கள். அல்லது பயிற்சி பெற்ற "கும்கி" யானையின் உதவியோடு அதனை திசை மாற்றி அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

அரிக்கொம்பனைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணாமலையில் இருந்து கும்கிகள், ஓசூரில் இருந்து சிறப்பு வாகனங்கள், மதுரையில் இருந்து அரிக்கொம்பன் சாந்தப்படுத்த கால்நடை மருத்துவர்கள் தேனிக்கு வருகின்றனர். அரிக்கொம்பன் தும்பிக்கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்