Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வைத்து பிரதமர் பெருமிதம் | PM Modi Places Sengol in New Parliament Building

Priyanka Hochumin Updated:
தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வைத்து பிரதமர் பெருமிதம் | PM Modi Places Sengol in New Parliament BuildingRepresentative Image.

நியூ டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வைத்து பெருமைப் படுத்தினார்.

இன்று காலை 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்த பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா தொடங்கியது. பிறகு பாரம்பரியம் மற்றும் அடையாளங்கள் நிறைந்த விழாவில், பிரதமருக்கு ஆதீனம் பார்ப்பனர்களால் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோல் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கையில் புனித செங்கோலுடன் தமிழ்நாட்டின் பல்வேறு ஆதீனங்களின் தலைமைக் குருக்களிடம் ஆசி பெற்றார்.

அதன் பின்னர் "நாதஸ்வரம்" மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, செங்கோலை ஊர்வலமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கொண்டு சென்று மக்களவை அறையில் சபாநாயகர் நாற்காலியின் வலது பக்கத்தில் ஒரு சிறப்பு அடைப்பில் நிறுவினார் பிரதமர் மோடி. அதற்கு பிறகு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியில் மிக முக்கிய பங்கு வகித்த ஊழியர்களை பிரதமர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜிதேந்திர சிங், அமித் ஷா, பல மாநில முதல்வர்கள், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செங்கோலானது 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் கைமாறியதைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் பெறப்பட்டது. இந்த செங்கோல் சோழர்களின் காலத்தில் தங்கக் கோட்டுடன் வெள்ளியால் ஆனது. மேலும் 5 ஆதி நீளம் கொண்ட அந்த செங்கோலின் மேற்புறத்தில் நந்தி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது சிவபெருமானின் புனித காளை மற்றும் நீதியைக் குறிக்கிறது. செங்கோல் என்ற சொல் தமிழ் வார்த்தையான 'செம்மை' என்பதிலிருந்து பெறப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்