Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்?... நாம் தமிழர் கட்சி சீமான் அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்?... நாம் தமிழர் கட்சி சீமான் அதிரடி அறிவிப்பு! Representative Image.

29 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் பெண் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு பகுதி மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக  இடைத்தேர்தலில் பொறுப்பாளர்களை நியமிக்கும் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

  
முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

 

ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,  ஈரோடு கிழக்கு பகுதி இடைத்தேர்தலில்  பெண் வேட்பாளர் நிறுத்தபடுவார் எனவும், எத்தனை அணி இருந்தலும் நாங்கள் எதிர்த்து தனித்து  மட்டுமே போட்டியிடுவோம், ஏனென்றால்   வெல்லவேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு, 
எங்களை போன்று தனித்து நிற்க யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

 

மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் கீழ் இருக்கும்   பறக்கும் படை அநியாய படையாக செயல்பட்டு வருகிறது. ரகசியமாக வீடு வீடாக சென்று பணம் கொடுப்பவர்களை விட்டுவிட்டு, மளிகை கடைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பணத்தை பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்.


ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்ற  மாயையை கட்டமைத்து விடுகின்றனர்..
மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டால் ஆளும் கட்சி ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை, 
 இந்த 2 ஆண்டு ஆட்சி சிறந்த ஆட்சியாக இருந்தால் இடைத்தேர்தலில் ஒட்டுக்கு பணம் தர மாட்டார்கள். முதியோர் உதவி தொகை கொடுக்க காசு இல்லை தேர்தலுக்கு ஓட்டுக்கு கொடுக்க காசு இருக்கும், இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சம்பாதித்ததை திமுக இடைத்தேர்தலில் செலவு செய்வார்கள்.

 

யார் கூட்டணியும் இல்லாமல்  நாங்கள் தனித்து நிற்பதே பெரிய சாதனை தான்..
இன  அழிப்பிலிருந்து  பிறந்த கூட்டம் இது  யார் ஆதரவும் இல்லாமல் நிச்சயம் வெல்வோம், ஆனால்  யார் ஆதரவு கொடுத்தாலும் பாஜக தான் ஒருபோதும் வெல்லாது என்றும் கூறினார். மேலும் இந்து சமய அறநிலை துறை என்பதை, தமிழா் சமய அறநிலைய துறை என வைக்க வேண்டும் என்பதே எங்கள் பல ஆண்டு கோரிக்கை.

 

திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல்தான் என்றால்.. தமிழர் ஆட்சி, தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என்று கூற வேண்டியதுதானே. ஏன் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்.  தமிழர் திருநாள் என்று கூறுவதில்லை திராவிட திருநாள் என்றுதான் கூறுகிறார்கள்.  தமிழர் அடையாளங்களை வேறு வேறு அடையாளங்களால் மூடி மறைக்கிறார்கள்.

 

அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சார நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு அரசு முக்கிய நிகழ்வுகளும் ஏதேனும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகள் ஆவது முன் நிறுத்தப்பட வேண்டும், அதனை எங்களது கோரிக்கையாகவே வைக்கிறோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்