Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

செல்லாது செல்லாது.. ஒருவர் வேட்புமனு நிராகரிப்பு.. இருமுனைப் போட்டியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்!!

Sekar October 01, 2022 & 18:09 [IST]
செல்லாது செல்லாது.. ஒருவர் வேட்புமனு நிராகரிப்பு.. இருமுனைப் போட்டியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்!!Representative Image.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஏஐசிசி மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கார்கே 14 படிவங்களையும், தரூர் ஐந்து படிவங்களையும், திரிபாதி ஒரு படிவத்தையும் சமர்ப்பித்தனர். திரிபாதியை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் கையொப்பம் பொருந்தாததாலும், மற்றொரு முன்மொழிபவரின் கையொப்பம் மீண்டும் மீண்டும் போடப்பட்டதாலும் அவரது படிவம் நிராகரிக்கப்பட்டதாக மிஸ்திரி கூறினார்.

மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி நடந்தாலும், கார்கேவுக்கு மேலிட ஆசி இருப்பதால், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கார்கே ராஜ்யசபாவில் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற காங்கிரஸின் உதய்பூர் தீர்மானத்தின்படி அவர் எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, கட்சியில் பெரிய மாற்றத்திற்காக போராடுவதாக கார்கே கூறினார். மேலும் அனைத்து பிரதிநிதிகளும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைத்து மாநில மூத்த தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

அவரது வேட்புமனுவை அசோக் கெலாட், திக்விஜய சிங், பிரமோத் திவாரி, பி.எல்.புனியா, ஏ.கே. ஆண்டனி, பவன் குமார் பன்சால் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்மொழிந்தனர். ஜி23 தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் மணீஷ் திவாரி ஆகியோரும் அவருக்கு ஆதரவளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்