Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை..!

Baskaran Updated:
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை..!Representative Image.

சென்னை: தமிழ் திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை வினோதினி வைத்தியநாதன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தனது வித்தியாசமான குரல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடல், பிசாசு, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கருத்துகளை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகரும், மநீம தலைவருமான கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்நீ எனக்கு என்ன செஞ்சே?

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?

அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமிசீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்

கடவுள்: போதும் போதும்சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.

அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி. ஆரம்பிக்கலாங்களா? ....மய்ய அரசியல…” என தெரிவித்துள்ளார்.  இதன்மூலம் அவர் மநீம கட்சியில் இணைந்துள்ளதை தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்