Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

4வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை..போலீஸ் வலைவீச்சு..!

madhankumar May 16, 2022 & 10:40 [IST]
4வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை..போலீஸ் வலைவீச்சு..!Representative Image.

திருவாரூர் மாவட்டத்தில் தான் பெற்ற 4வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டதில் உள்ள திருவாரூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிடங்களில் கொத்தனாராக வேலை செய்யும் இவருக்கு 4வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில்  ராஜேந்திரன் அவரது 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 1088 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்துள்ளார்கள்.

சென்னைக்கு வந்த அழைப்பை குழந்தைகள் பாதுகாப்பு சமூக நலப்பணி அமைப்பினர் திருவாரூர் பகுதியில் செயல்படும் அந்த அமைப்பின் கிளைக்கு தெரிவித்துள்ளனர். அதன்படி திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு நல சமூக பணி உறுப்பினர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் ராஜேந்திரன் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நலப்பணி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா அணைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன் மீதி போக்ஸோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் ராஜேந்திரன் அப்பகுதியை சேர்ந்த பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அரைகுறை ஆடை அணிவது, பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசுவது என வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

ஊர் பெரியவர்கள் பெரியவர்களிடம் இதுகுறித்து புகார் சென்று அவர்களும் ராஜேந்திரனை எச்சரித்துள்ளனர். இந்த நிலையில்தான் தான் பெற்ற 4 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த கொடூரனை கைது செய்து சிறையில் அடையுங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் தொடர்ந்து ராஜேந்திரனை தேடும் பனி நடந்துவருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்