Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெல்லியில் தனியார் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

Surya Updated:
டெல்லியில் தனியார் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். Representative Image.

டெல்லி முகர்ஜி நகரில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்றில் நேற்று மூன்றடுக்கு மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் பயிற்சி மையத்தில் இருந்த மாணவ மாணவிகள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் ஜன்னல் கதவுகளை உடைத்து கயிறு வழியாக மாணவர்களை நீட்டனர். இருப்பினும் கடும் புகை மூட்டத்தில் சிக்கி 60 மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 22 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. விரிவான விசாரணைக்கு டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விபத்து தொடர்பாக விசாரணையை கையில் எடுத்துள்ளது. 

டெல்லி தீயணைப்பு துறை, டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மூவரும் இரண்டு வாரங்களுக்குள் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் விபத்து குறித்தும் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், தீ பாதுகாப்பு தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா மற்றும் தீ பாதுகாப்பு தணிக்கை நடவடிக்கைகள் நடத்தப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதா? இல்லையா? என்பதை சரி பார்த்து அது தொடர்பான அறிக்கையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்