Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை விருப்பம்

Baskarans Updated:
மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை விருப்பம்Representative Image.

புதுச்சேரி: மீனை சைவை உணவில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு தமிழிசை அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் தற்போது மீனாட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார். மீனாட்சி எப்படி இருக்கும் என்றால், முட்டையிட்டு கண்களில் வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பது போல இருக்கும்.

அதுபோல தான் மத்திய அரசு தொலைவில் இருந்தாலும் நாட்டினை தன் கண்களில் வைத்து காத்து வருகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், எனக்கு மீன் வகை உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் குழம்பு என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதனால் நான் ஒரு யோசனை செய்தேன்.

தற்போது முட்டை சைவமா? அசைவமா என்ற விவாதம் இருப்பது போல, பலர் இன்று சைவம் என்று சொல்லிக் கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டது போல, மீனையும் சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும். இது மீனவ சகோதரர்களுக்கு இன்னும் பலனாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது என்றார்.

மீன் சாப்பிடுவதால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் எனவும் நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்