Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கனடா போறீங்களா.. உஷாரா இருங்க.. மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை!!

Sekar September 23, 2022 & 19:52 [IST]
கனடா போறீங்களா.. உஷாரா இருங்க.. மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை!!Representative Image.

வெறுக்கத்தக்க குற்றங்கள், மதவெறி வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், விழிப்புடன் இருக்கவும் மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் இது தொடர்பான சம்பவங்களை கனேடிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியதாகவும், இந்த குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்திய பிரிவினைவாத காலிஸ்தான் சார்பு சக்திகளால் சமீபத்தில் காலிஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு என அழைக்கப்படும் ஒரு வாக்கெடுப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ள நேரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அதிகாரிகளிடம் இந்தியா பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கனடாவில் உள்ள இந்திய நாட்டவர்களும், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அந்தந்த இணையதளங்கள் அல்லது MADAD போர்ட்டல் madad.gov.in மூலம் பதிவு செய்துகொள்ள அங்கிருக்கும் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், கனடாவில் இந்திய எதிர்ப்பு கனடிய காலிஸ்தானி தீவிரவாதிகளால் ஒரு முக்கிய இந்து கோவில் சிதைக்கப்பட்டது. இந்திய தூதரகம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், கனேடிய அதிகாரிகளை இவ்விவகாரத்தை விசாரித்து, குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்