Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சட்டவிரோத போன் ஒட்டுக்கேட்பு.. முன்னாள் மும்பை கமிஷனர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி!!

Sekar July 20, 2022 & 19:32 [IST]
சட்டவிரோத போன் ஒட்டுக்கேட்பு.. முன்னாள் மும்பை கமிஷனர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி!!Representative Image.

சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் மும்பை காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டேவை 9 நாள் அமலாக்கத்துறையின் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சஞ்சய் பாண்டே, என்எஸ்இ-யின் முன்னாள் தலைவர்கள் ரவி நரேன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா ஆகியோர் மீது என்எஸ்இயில் பணிபுரியும் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து அவர்களது போன் கால்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக கூறி அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

சஞ்சய் பாண்டேவை 14 நாள் காவலில் வைக்கக் கோரிய அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில், "2000 ஏப்ரலில் சஞ்சய் பாண்டே பணியில் இருந்து ராஜினாமா செய்தார். எனினும் அதன்பிறகு 2001-2006 க்கு இடையில் அவரது சேவை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், அவர் 2007 இல் விஆர்எஸ் வாங்கினார். அதை அவர் அக்டோபர் 2008 இல் திரும்பப் பெற்றார்.

சஞ்சய் பாண்டே ஐசெக் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2001 இல் தொடங்கியுள்ளார். சஞ்சய் பாண்டே நிறுவனத்தின் இயக்குநராக இல்லாவிட்டாலும், அவர் சேவையில் இருந்ததார்." என அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியது.

அவர் அலுவலகக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அவர் நிறுவனத்தின் செயல்பாடுகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்