Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100 கோடி கொடுத்தா அமைச்சர் பதவி.. உஷாரான பாஜக எம்எல்ஏ.. ஸ்கெட்ச் போட்டு அள்ளிய போலீஸ்!!

Sekar July 20, 2022 & 16:28 [IST]
100 கோடி கொடுத்தா அமைச்சர் பதவி.. உஷாரான பாஜக எம்எல்ஏ.. ஸ்கெட்ச் போட்டு அள்ளிய போலீஸ்!!Representative Image.

மகாராஷ்டிர அரசில் அமைச்சர் பதவி வாங்கி தருவதாக கூறி, பாஜக எம்எல்ஏவிடம், 100 கோடி ரூபாய் கேட்டு ஏமாற்ற முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பலை, மும்பை மிரட்டல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட மகாராஷ்டிர அரசாங்கத்தில் இலாகாக்கள் மறுபகிர்வு செய்யப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டவுண்ட் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகுல் குல்லின் தனிப்பட்ட உதவியாளருக்கு, ஜூலை 16 ஆம் தேதி ரியாஸ் ஷேக் என்று அடையாளப்படுத்திய ஒருவரிடமிருந்து அமைச்சர் பதவி பெற்றுத் தருவது தொடர்பாக விவாதிக்க ஒரு அழைப்பு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, குல் அவரை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தார். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் மூத்த அரசியல்வாதி ஒருவர் இந்த வேலையைச் செய்வார் என்றும், ஆனால் அதற்கு அவர் ரூ.100 கோடி செலுத்த வேண்டும் என்றும் ரியாஸ் கூறினார். 

இதனால் சந்தேகப்பட்ட குல், குற்றம் சாட்டப்பட்டவரை சிக்க வைக்க திட்டமிட்டு அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் அவர் தனக்கு ஆர்வம் இருப்பது போல் காட்ட தொடர்ந்து பேரம் பேசியுள்ளார். இதையடுத்து இறுதியில் 100 கோடிக்கு பதிலாக ரூ.90 கோடிக்கு டீல் இறுதி செய்யப்பட்டது. 

ஆனால் முன்பணமாக 20 சதவீத பணத்தை ரியாஸ் கேட்டுள்ளார். எம்எல்ஏவும் பணம் கொடுக்க சம்மதித்து, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு அழைப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், குல் என்ன நடக்கிறது என்பது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமைக்கு தெரிவித்ததோடு, மும்பை மரைன் டிரைவ் காவல் நிலையத்திலும் புகார் செய்தார். மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் விசாரணையை கண்காணித்து, இந்த வழக்கை நகர குற்றப்பிரிவுக்கு ஒப்படைத்தார். 

நகர குற்றப்பிரிவு பின்னர் பொறி வைத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது கூட்டாளிகள் முன்பணம் ரூ.18 கோடியை வசூலிக்க எம்எல்ஏவைச் சந்திக்க ஹோட்டலுக்குச் சென்றபோது, ​​​பிடித்தனர். பின்னர் விசாரணைக்காக போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரியாஸ் ஷேக், யோகேஷ் குல்கர்னி, சாகர் சங்வி மற்றும் ஜாபர் உஸ்மானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 26 வரை போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 3 மொபைல் போன்களை போலீசார் மீட்டனர். காவல்துறை வட்டாரங்களின்படி, டெல்லியில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இருக்கும் கும்பலின் ராஜாவாக உஸ்மானி இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த நபரின் பங்கு என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்