Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தை தொடர்ந்து ஹரியானாவில்...அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்..!

madhankumar July 29, 2022 & 19:48 [IST]
தமிழகத்தை தொடர்ந்து ஹரியானாவில்...அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்..!Representative Image.

தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது, மாநகர மற்றும் நகர பேருந்தில் பெண்களுக்கு இலவசம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை சிறப்பு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து  ஹரியானாவிலும்  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்படுள்ளது.  ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவிப்பு. ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஹரியானா போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்