Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CHESS OLYMPIAD UPDATE : இந்தியாவின் வெற்றிக்கணக்கை தொடங்கிய சிறுவன்...!

madhankumar July 29, 2022 & 18:55 [IST]
CHESS OLYMPIAD UPDATE : இந்தியாவின் வெற்றிக்கணக்கை தொடங்கிய சிறுவன்...!Representative Image.

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது, அதில் இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தனர். இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.இந்த போட்டி இன்று பகல் 3 மணியளவில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியானது பல்வேறு நாடுகளும் மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தொடங்கப்பட்ட இந்த போட்டித்தொடரில் இந்திய அணியின் A பிரிவு ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை காண்கிறது. மேலும் இந்திய அணியின் B பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. அதோடு இந்திய அணியின் C பிரிவு சூடானை எதிர்கொள்கிறது. இதில் ஓபன் பிரிவில் இந்திய B அணியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய இந்திய அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக ஆடிய அப்துல் ரகுமானை இந்திய அணி சார்பாக ஆடிய வீரர் ரோனக் சத்வானி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கிய சத்வானி, தனது 36-வது நகர்த்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய அணி சார்பாக ஆடி முதல் வெற்றியை பெற்று தந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ரோனக் சத்வானி, தனது 13-வது வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்