Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூலூரில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானங்கள்.. காரணம் என்ன?

Sekar August 12, 2022 & 10:06 [IST]
சூலூரில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானங்கள்.. காரணம் என்ன?Representative Image.

பசிபிக் பெருங்கடலில் மேற்கொண்ட ஒரு மெகா இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள் உட்பட ஒரு பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படைக் குழு, தமிழ்நாட்டில் உள்ள இந்திய விமானப் படையின் சூலூர் தளத்தில் மூலோபாய ரீதியாக தரையிறங்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

பிரான்ஸ் படைக்கு இந்திய விமானப்படை வழங்கிய இந்த ஆதரவு, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க 2018ல் பிரான்ஸ் மற்றும் இந்தியா கையெழுத்திட்ட பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை பிரதிபலிக்கிறது.

ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில், பிரான்சில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்கு அனுப்பப்பட்ட பிரெஞ்சுக் குழுவானது நீண்ட தூர பயணத்தின் ஒரு அங்கமாக சூலூரில் உள்ள விமானப்படை நிலையத்தில், தொழில்நுட்ப தேவைகளுக்காக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழுவில் மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள் மற்றும் அதற்கு ஆதரவாக செல்லும் சில விமானங்கள் உள்ளன. பிரஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை இந்தோ-பசிபிக் பகுதியில் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 18 வரை பெகாஸ் 22 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

மிஷன் பெகாஸ் 22 என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் விரைவாக தனது படைகளை கொண்டு வந்து நிலைநிறுத்துவதற்கான பிரான்சின் திறனை நிரூபிக்கும் ஒரு முயற்சி ஆகும்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் விமானங்கள் இங்கு தரையிறங்கியது, பிரெஞ்சு மற்றும் இந்திய விமானப்படைகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் இயங்குதன்மையை வெளிப்படுத்தியது. மேலும் இரு விமானப்படைகளும் இப்போது ரஃபேல் ஜெட் விமானங்களை கொண்டிருப்பதன் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மிஷன் பெகாஸ் 22 இன் பின்வரும் கட்டங்களில், ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 10 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிட்ச் பிளாக் விமானப் பயிற்சியில் பிரெஞ்சு விமானப்படை குழு பங்கேற்கும். இந்திய விமானப்படையும் இந்த பலதரப்பு பயிற்சியில் பங்கேற்கும். ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, இந்தோனேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இதில் கலந்து கொள்ள உள்ளன.

சீனா-தைவான் பரபரப்பு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்தோ-பசிபிக்கில் நடக்கும் இந்த மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி கவனத்தை ஈர்த்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்