Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சர்வதேச இளைஞர்கள் தினம் – இளைஞர்களே..! இது உங்களுக்கான நாள்…

Gowthami Subramani August 11, 2022 & 21:20 [IST]
சர்வதேச இளைஞர்கள் தினம் – இளைஞர்களே..! இது உங்களுக்கான நாள்…Representative Image.

சர்வதேச இளைஞர்கள் தினம்

இன்றைய இளைஞர்கள் நாளைய எதிர்காலம் என்று கூறுவர். எதிர்காலத்தில் இந்த உலகை ஆளப்போகிற இளைஞர்கள், இன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய உலகில் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சாதாரணமானவை அல்ல. அதே போல, பிரச்சனைகளே இல்லாத நாள்களும் அமைவதில்லை.

வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளைத் தவிர, ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பெருமளவில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவும், அவர்களின் திறனைப் போற்றும் வகையிலும், சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச இளைஞர்கள் தினம் வரலாறு

ஆண்டுதோறும் சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் கொண்டாப்படும் என ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. தேசிய இளைஞர்கள் தினம் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி மாதம் 12 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை லிஸ்பன் நகரில் உலக நாடுகளின் இளைஞர் சம்பந்தமான பிரச்சனைகளையும், செயல்பாடுகளையும் அனைவரது கவனத்தில் கொண்டு வரப்படுவதற்கு சர்வதேச இளைஞர் தினம் ஒன்று கடைபிடிக்கப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 17, 1999 ஆம் நாள், சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானம் செய்யப்பட்டது. இதனையடுத்து, அடுத்த ஆண்டான 2000-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இளைமையே புதுமை

எத்தனை பருவ காலங்கள் வந்தாலும், இளைமைக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. பொதுவாக நமது வாழ்க்கைப் பருவத்தை, குழந்தை, இளமை, முதுமை என மூன்று பருவங்களாக பிரிக்கலாம்.

இதில் குழந்தைப் பருவத்தில் தான் நமது வாழ்க்கையே தொடங்குகிறது. இருந்தபோதிலும், இந்தப் பருவத்தில் நமது எல்லா தேவைகளும் மற்றவர்களையே சார்ந்திருக்குமாறு அமைகிறது. எதிர்காலத்தில் நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பதற்கு இந்தப் பருவம் சான்றாக அமையும். வாழ்வில் நீ எதிர் கொள்ளத் தேவையான துணிச்சல், தன்னம்பிக்கை உள்ளிட்டவை உன் மனதிற்குள் படிய வேண்டிய பருவம் இது.

வளரிளம் பருவம் என்பது ஒரு மாறுநிலைக் கட்டடம் என்றே கூறலாம். இந்தப் பருவத்தில் நம்முடைய உடல் ரீதியாக மாற்றங்களை உணர்வதாகக் கூடிய காலம் என்று கூறுவர். அதாவது, விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் காலத்தை உலக சுகாதார நிறுவனம் 10 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட காலமாக வரையறை செய்துள்ளது.

இந்த விடலைப் பருவத்திற்குப் பின்னர் வருவதே இளமைப் பருவம். பொதுவாக, 18 முதல் 24 அல்லது 29 வயது வரையிலான கால கட்டமே இளமைப் பருவம் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கென ஒரு குறிப்பிடப்பட்ட பண்புகள் உள்ளது. வாழ்வில் குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொண்டதை இந்த இளமைப் பருவத்திலே நிகழ்த்திக் காட்டுவதற்கான காலம் ஆகும். வாழ்வில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறோம் என இது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான தருணம் இது. இந்த இளமைப் பருவத்தை வீணடிக்காமல், வாழ்வில் வெற்றி பெற்று உயர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

முதுமைக்காலம் – இந்த காலம் இளமைக் காலத்தை பொறுத்தே அமைகிறது. இளமைக் காலத்தில் நீ எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளுமே இந்த முதுமைக் காலத்தில் உதவக் கூடியவையாக அமையும்.

சுவாமி விவேகானந்தர், அப்துல்கலாம் கூறியவை

அன்றே, சுவாமி விவேகானந்தர் என்ன கூறினார் தெரியுமா..?

“இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள். இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று. சுவாமி விவேகானந்தர் கூறியவற்றில் இருந்தே தெரிகிறது, இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம் என்று. இன்று நாம் செய்யும் செயலே நாளை நம்மையும் நம் நாட்டையும் மேலோங்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதே போல, அப்துல்கலாம் ஐயா அவர்களும் இளைஞர்கள் குறித்து தெரிவித்ததாவது, “வித்தியாசமாக சிந்திக்க தைரியம், புதிய கண்டிபிடிப்பு, ஆராயப்படாத பாதையில் பயணித்தல், சாத்தியமற்றதைக் கண்டறியும் தைரியம், அதில் உள்ள சிக்கல்களை வென்று வெற்றி பெற வேண்டும் என்று இளைஞர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற ஒவ்வொரு கூற்றும் நாம் ஏன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறோம்..? நாம் ஏன் முதிர்ச்சியடைகிறோம்? என்ற கேள்வியை எழுப்புகின்றன.

எனவே, இந்த அற்புதம் மிக்க இளமைப் பருவத்தில் நீ செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. எழுந்து வா…. எதிர்காலத்தில் உன் பெயர் சொல்ல இன்றே நீ எழுந்து வா….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

International Youth Day Theme 2022 | International Youth Day 2022 | International Youth Day Activities | International Youth Day in India | International Youth Day 2022 | International Youth Day 2022 History | What is the Purpose of International Youth Day | Why is International Youth Day celebrated | International Youth Day Meaning | What is the International Youth Day | How Did the Youth Day Start | International Youth Day 2022 Theme | International Youth Day Quotes | International Youth Day 2022 Theme | International Youth Day 2020 Theme | International Youth Day message | International Youth Day 2022 Activities | UN International Youth Day 2022 Theme | Happy International Youth Day | Speech on International Youth Day


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்